ஊரெழு வேலன் (இயற்பெயர்: சபா.வடிவேலையா). சுன்னாகம்: வேலழகன் வெளியீடு, கே.கே.எஸ்.வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (சுன்னாகம்: முத்து பிரின்டர்ஸ்).
x, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.
திரு. வடிவேலு அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு செப்டெம்பர் 1988இல் வெளியிடப்பட்ட அறுபது நல்வாசகங்கள் அடங்கிய சிறுநூல் வெளியிடப்பட்டது. அரிய படிப்பினைகளாக அமையும் இக்கருத்துக்கள் அன்றாட வாழ்வியலோடு ஒட்டிய வெவ்வேறு சுவைகளைக் கொண்டவையாக அமைந்திருந்தது. இந்நூல் அவரது 80ஆவது ஆண்டு நிறைவு வெளியீடாக, மேலும் பல தகவல்களையும் உள்ளடக்கி புதிய தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. நூலில் இது இரண்டாவது பதிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45780).