சரோஜினி பாஸ்கரன். தெகிவளை: சரோஜினி பாஸ்கரன், இல. 11, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (சென்னை 600004: சண்முகஜெயம் அச்சகம், இல. 23, அருண்டேல் வீதி, மைலாப்பூர்).
120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.
வீரகேசரி நாளிதழில் வெளிவந்த முப்பத்தியாறு கட்டுரைகளின் தொகுப்பு. ஆசிரியர் இலங்கையில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்த்திய மகான், துன்பத்தை வாழ்க்கையின் தவமாகக் கொண்ட அன்னை ஸ்ரீ சாரதாதேவி, பற்றற்ற வாழ்க்கை மூலமே இறைவனை அடையலாம், கீதையின் சாரம், பசித்தவனுக்கு உணவளிப்பது இறைபணிக்கு ஒப்பானது, மெய்ஞானத்தை உணரவைக்கும் குருதீட்சை, ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் மெய்ஞானம், மனிதனின் துயர்துடைக்கும் ஆன்மீக பயணம், குழந்தைப் பருவத்திலேயே ஆன்மீக அஸ்திவாரம் இடப்படல் வேண்டும், கலியுகத்தில் ஆன்மீகத்தின் அவசியம், கடவுளை நம்புவதற்கும் ஆழ்ந்த மனவலிமை வேண்டும், இறைவனை அடைய மனத்தெளிவே அவசியம், இறைவனை உண்மையாக நேசிப்பவனுக்கு எதுவும் கேட்காமலேயே கிடைக்கும், இறைவன் பக்தர்களை சோதிப்பது பாவங்களை களைவதற்கே, இறைவனை அடைவதே இந்துமதக் கோட்பாடு, மனிதனை மனிதனாக வாழவைப்பதே இந்துமதம் என இன்னோரன்ன ஆன்மீகத் தலைப்புகளில் இந்நூலிலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.