உமாபதி சிவாசாரியர் (மூலம்), தோகையார் (தெளிவுரை). யாழ்ப்பாணம்: மு.கணபதிப்பிள்ளை, ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி, பதிப்பு விபரம்; தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
32 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18.5×12.5 சமீ.
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. திருவருட் பயனின் அதிகாரங்கள் அவற்றின் உட் பொருள்களுக்கு ஏற்பப் பெயரிடப்பட்டுள்ளன. இவை, பதிமுது நிலை, உயிரவை நிலை,இருள்மல நிலை, அருளது நிலை, அருளுறு நிலை, அறியு நிலை, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை என்பனவாகும். மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் இந்த நூல் தோகையார் அவர்களின் தெளிவுரையுடன் கூடியதாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21904).