11085 காமிகாகமம் கூறும் அக்கினி வழிபாடு: சித்தாந்த அடிப்படையில் ஒரு நோக்கு.

க.பாலச்சந்திர சிவாச்சாரியார். கொழும்பு: சிவஸ்ரீ க.பாலச்சந்திர சிவாச்சாரியார், ஆசிரியர், விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, மே 2016. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-43223-0-1.

பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய அக்கினி, சைவ வழிபாடுகளிலும் முதன்மை பெறுகின்றது. இந்நூல், சிவாகமங்களில் முதலாவதாகக் காணப்படும் காமிகாகமம் பற்றிய தகவல்களையும் அவ்வாகமங்களில் தெளிவுபடுத்தப்படும் அக்கினி காரிய படலம் மூலமாக அக்கினி வழிபாட்டு முறைகள் பற்றிய சிந்தனைகள், அதன் அர்த்தபூர்வமான உள்ளார்த்தங்கள் என்பவற்றையும் தெளிவுபடுத்துகின்றது. 2015ஆம் ஆண்டு எம்.ஏ. சைவசித்தாந்த நெறியினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்து அதன்ஆய்வுக் கட்டுரையை இந்நூல்வடிவில் சிவஸ்ரீ க.பாலச்சந்திர சிவாச்சாரியார் வழங்கியிருக்கிறார். இவ்வாய்வு அக்கினி வழிபாடு பற்றிய அறிமுகம், ஆகமங்களின் தோற்றமும் சிறப்பும், சைவ சமயமும் காமிகாகமமும், காமிகாகமம் கூறும் அக்னி வழிபாடு, அக்னி வழிபாடும் வாழ்வியலும் ஆகிய ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60738).

ஏனைய பதிவுகள்