11088 சித்தாந்த ஞானக் களஞ்சியம்.

மலர்க் குழு. ஏழாலை: ஏழாலை இலக்கிய கலாநிதி, பண்டிதமணி மு.கந்தையா நூல்வெளியீட்டுக் கழகம், சத்தி முற்றம், 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

400 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

பண்டிதமணி மு.கந்தையாவின் மறைவின் முதலாவது ஆண்டு நிறைவின்போது  30.6.2003இல் வெளியிடப்பட்ட நினைவுநூல். பண்டிதமணி மு.க. பற்றிய சான்றோர் நினைவுக் களஞ்சியம் (16 படைப்பாக்கங்கள்), பண்டிதமணி மு.க. பற்றிய தொடர்புசாதனச் செய்திக்களஞ்சியம் (11 படைப்பாக்கங்கள்),  பண்டிதமணி மு.க. பற்றிய கவிதைக்களஞ்சியம் (9 படைப்பாக்கங்கள்), பண்டிதமணி மு.க. வின் நூற்களஞ்சியம் அறிமுகம் (14 படைப்பாக்கங்கள்), பண்டிதமணி மு.க. வின் கட்டுரைக் களஞ்சியம் (21 படைப்பாக்கங்கள்), அறிஞர்களின்ஆய்வுக் களஞ்சியம் (9 படைப்பாக்கங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30562).

ஏனைய பதிவுகள்