யாழ்ப்பாணம்: அமரர் ஸ்ரீவரதராஜன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xvi, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
யாழ்ப்பாண மாவட்ட மருந்துகளின் பொறுப்பதிகாரியாகப் பதவிவகித்து இளைப்பாறிய அமரர் ஸ்ரீ வரதராஜன் அவர்களின் நினைவு வெளியீடாக 02.04.2000 அன்று வெளியிடப்பட்ட நூல். பதிப்புரையில் வெளியீட்டாளர்களின் கூற்று பின்வருமாறு அமைந்துள்ளது. ‘செய்யுள்களாய் அமைந்த விரிநூலாகிய, அருநந்தி சிவாசாரியாரின் சிவஞானசித்தியாரது பகுதியாகிய, சித்தாந்த உண்மைகளைத் தெளிவுபட விளக்கும் சுபக்கத்துக்கு, பின்னவரான மானிப்பாய் திருவிளங்க தேசிகர் எழுதிய பொழிப்புரைகளைத் தனியே தொகுத்து நூலாக வெளியிட்டால், செய்யுள்களால் ஏற்படும் மலைப்பு, கடின உரை கற்பதால் ஏறபடும் சிக்கல், பிறசமய கண்டனம் ஆகிய மற்றொன்று விரித்தலால் சித்தாந்தத்தைத் தொடர்ச்சியாக அறியமுடியாமல் ஏற்படும் சலிப்பு முதலியன இன்றி எல்லோரும் சித்தாந்த தத்துவத்தை எளிதாக அறியக்கூடியதாக இருக்குமெனப் பெரியோர்கள் பலரும் கூறினர். அவர்கள் கூறியதைச் செயற்படுத்தி உள்ளோம்.’ (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24227).