சங்கராச்சாரிய சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சுநிலையம், 1வது பதிப்பு, 1935. (யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சு நிலையம்).
79 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும் நூல். ஆதி சங்கரர் எழுதிய முதலாவது ஆன்மீக நூல் இதுவாகும். இதில்அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிக எளிதாக ஆன்மீகக் கருத்தக்களை வழங்கியிருக்கிறார். இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழியை ஒரு சாமானியன் எளிதாக அடைய முடியும் என்பர். விவேகம் என்பதை அறிவு என்று பொதுவாகக் கூறுவாருளர். ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாதஇறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்து மேலும் பல உண்மைகளை அறிவது என்று அர்த்தம் கொள்ளப்படுகின்றது. எது தவறு எது சரியானது என்று சிந்திப்பதும் விவேகம் தான். இந்நூல் விவேக சூடாமணியின் சாரத்தை உள்ளடக்குகின்றது. இவ்வெளியீட்டின் ஈழத்துப் பதிப்பாசிரியர் பெயர் நூலில் குறிப்பிடப்படவில்லை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13249).