ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
(2), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
அறிவியல்பூர்வமாக வானியலுடன் ஜோதிடத்தை ஒப்பிட்டு ஆராயும் நூல். ஜோதிடம் சம்பந்தமான அடிப்படை விபரங்கள் அடங்கியது. ஜோதிடத்தின் நோக்கம், அதன் வரலாறு, விஞ்ஞான ரீதியில் விளக்கம், நவக்கிரகங்கள் எவை, ஜோதிடம் கூறும் நவக்கிரகங்கள், நவக்கிரகங்களின் வகை, ராகுவும் கேதுவும் கிரகங்களா?, ஜாதகக் குறிப்பு, தலைவிதியை மாற்றமுடியுமா?, பஞ்சாங்கம், கிழமைகளும் கிரகங்களும், திதிகள், பட்சங்கள் இரண்டு, நட்சத்திரங்கள் 27, இராசி மண்டலத்தின் ஆரம்பம், இராசிச் சக்கரமும் கிரகங்களும், மாதங்கள் பன்னிரண்டு, சௌரமானமும் சாந்திரமானமும், ருது-பருவகாலங்கள் ஆறு, வானியல் அடிப்படையிலான சில தகவல்கள், இலகுவான வழிபாட்டு முறைகள் என இன்னோரன்ன விடயங்களை இந்நூல் விளக்குகின்றது. நவீன கல்வித் திட்டத்தின்படி உயர்தர வகுப்புகளுக்கு உகந்ததெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூலின் மேலட்டையில் ’வாழ்வில் சோதிடம்’ என்று அச்சிடப்பட்டுள்ளது).