ஸீ.எம்.ஏ. அமீன். திஹாரிய: ரேஷ்மா பப்ளிஷிங் ஹவுஸ், 330/2, வரபலான வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 A, கண்டிவீதி).
xvi, 322 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51014-4-8.
சமயம் பற்றிய எண்ணக்கரு, இந்து சமயம்: வளர்ச்சிப்போக்கும் வரைவிலக்கணமும், இந்து சமயக் கொள்கைகளும் புனித நூல்களும், இந்து சமயத்தில் சாதிப்பாகுபாட்டு முறைமை, இந்து சமயத்தின் கடவுட்கொள்கை, இந்துசமயச் சீர்திருத்தவாதிகள், இந்து சமயமும் இஸ்லாமும், புத்தர் காலத்துச் சிந்தனா மரபுகள், கௌதம புத்தர், புத்தரின் போதனைகளும் பௌத்த சமயத் தத்துவங்களும், மனிதன், உலகம், இறைவன், பௌத்த கொள்கையின் பொதுவான இயல்புகளும் பௌத்த நூல்களும், பௌத்த சமயப் பிரிவுகள், புத்தரும் நபி நாயகம்(ஸல்) அவர்களும், இஸ்லாம் வரைவிலக்கணமும் இயல்புகளும், இஸ்லாத்தின் கடவுட் கொள்கை, முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகள், முஸ்லிமின் ஐம்பெரும் அடிப்படைக் கடமைகள், இஸ்லாம் ஒரு வாழ்க்கைத் திட்டம் ஆகிய பிரதான 20 இயல்களில் இந்நூல் முச்சமயங்களையும் ஒப்பீட்டாய்வு செய்துள்ளது. விளக்கக் குறிப்புகள், துணை நூல்கள், சொல் அகராதி என்பன இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 196853).