வாகரைவாணன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலை பண்பாட்டுக் களரி, இல.1. யேசு சபை வீதி, 1வது பதிப்பு,டிசம்பர் 1999. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் ஓப்செட் அச்சகம்).
(4), 28 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×12.5 சமீ.
மட்டக்களப்பு கலை பண்பாட்டுக் களரி அமைப்பின்மூலம் அவ்வப்போது ஆய்வு நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதுடன் அவற்றின் கட்டுரைகளைத் தொகுத்து சிறு பிரசுரங்களாகவும் வெளியிட்டு வந்தவர் வாகரைவாணன். இந்நூல் வண.பிதா போல் சற்குணநாயகம் அவர்களின் அனுசரணையுடன், கிறிஸ்தவ மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றது. சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம் எனும் முழுப்பெயரை இயற்பெயராய்க் கொண்ட தமிழ்நிதி வாகரைவாணன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25452).