க.த.ஞானப்பிரகாசம். யாழ்;ப்பாணம்: கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், 10/2, மத்தியூஸ் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).
viii, 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43475-1-9.
நெடுந்தீவைச் சேர்ந்த அரச பொற்கிழிப் புலவர், கவிமாமணி க.த.ஞானப்பிரகாசம் அவர்களின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு இது. அவரது நூற்றாண்டு விழாவையும், பத்தாவதாண்டு நினைவு விழாவையும் ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வேதாகமச் சிறப்புகள், யேசுபிரானின் புதுமைகள்- உவமைகள்- பொழிவுகள், நமக்கோர் பாலன், மாமரி, புனிதர், பாப்பரசர், ஆயர் ஆகிய நூல்தொகுப்புகளில் இவரது கவிதைகள் பல இடம்பெற்றுள்ளன. 1948-1960 காலகட்டத்தில் இவரது கவிதைகள் பாதுகாவலன் பததிரிகையை அலங்கரித்துவந்தன. இவை அனைத்திலும் இருந்தெடுத்த தேர்ந்த கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61065).