ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: பிரசுரக் கமிட்டி, அரசாங்க ஊழியர் பௌத்த சங்கம், 53/3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 92+(4) + 10, (10), 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 63ஆம் ஆண்டாக அரசாங்க ஊழியர் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக சிலப்பதிகாரமும் பத்தினி வழிபாடும் (புலவர் த.கனகரத்தினம்), விடிவு நோக்கி இரந்தனம் (நயீம் ஷரிபுத்தீன்), மதி மயக்கும் பொருட்களை எடுப்பதிலான இடையூறுகள் (ஒல்கொட் குணசேகர) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17148).