ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 2வது பதிப்பு, ஆனி 2014, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம், கஸ்தூரியார் வீதி).
(2), 156 பக்கம், சித்திரங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 24.5×18.5 சமீ.
இந்நூல் சக்தி வழிபாட்டின் பல்வேறு பரிமாணங்களையும் எடுத்து விளக்கும் தகவல்களும், படங்களும், ஆதாரங்களும், விளக்கங்களும் அடங்கிய அருட்களஞ்சியம். இந்நூலின் முதற்பதிப்பு திருக்கோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதமகுரு, ஆதீனகர்த்தர் சிவஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்களின் ஜ்யேஷ்ட புதல்வர் பிரம்மஸ்ரீ இ.கைலாசசங்கர் சர்மா அவர்களின் சிவாசார்யாபிஷேக வைபவத்தை முன்னிட்டு மேற்படி தேவஸ்தானத்தினரால் 01.06.2014 அன்று வெளியிடப்பட்டது.