மு.கந்தையா. தெல்லிப்பழை: துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, தை 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xvi, 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
சேக்கிழார் 12ம் நூற்றாண்டில் அருளிய பெரியபுராணத்தின் அரிய சிந்தனைக் கருத்துக்கள் கொண்ட உரைகள் அடங்கிய நூல். செயற்கரிய செயல் புரிந்த திருத்தொண்டர்களின் அருமை பெருமைகளைச் சேக்கிழார் வழிநின்று நயம்பட ஆசிரியர் விரித்துரைத்துள்ளார்.
என்ன இது? ஏன் இது?, அம்பலத்தாடுவான், தருமந்தன் வழிச்செல்கை கடன், இனிப்பெறும் பேறொன்றில்லார், தபோதனர் தீரவே பசித்தார் செய்வதென்?, பொய்தரும் உள்ளமில்லான் பார்க்கிலன் போனான், இன்றெனக்கையன் செய்தது யார் செய்ய வல்லார்? சிறிய என் பெரும்பிழை பொறுத்தருள் செய்வீரோ? அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ? இங்கிது தன்னாற் போதாது என்னையும் கொல்லவேண்டும்? ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா, வென்றவர்தந் திருப்பெயரோ வேறொரு பேர், வருகின்றார் திருநாளைப் போவாராம் மறைமுனிவர் ஆகிய 13 தலைப்புகளில் பெரியபுராணச் சிந்தனை உரைகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்நூல் பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17391).