11118 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி மூன்று .

சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), க.இரகுபரன், ப.யசோதா (உதவிப் பதிப்பாசிரியர்கள்), சாந்தி நாவுக்கரசன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், 98 வாட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122 மத்திய வீதி).

(15), 256 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 27.5×21.5 சமீ.

பல்தொகுதிகளைக் கொண்ட இந்துக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது மூன்றாவது தொகுதியாகும். இதில் சிறியதும் பெரியதுமான 149 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், வித்துவான் க.ந.வேலன், பண்டிதர் கா.செ.நடராசா, வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன், கலாநிதி சோ.கிருஷ்ணராசா, திருமதி ஞானா குலேந்திரன், திரு. சீ. தெய்வநாயகம், செல்வி தங்கேஸ்வரி கதிர்காமர், திரு.க.இரகுபரன், செல்வி பத்மநாதன் யசோதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Stinkin Rich Harbors

Content Ready to Play Mustang Money 2 The real deal? As much as 100 Within the Money back Movies Harbors Which might be Excluded Of

11271 மக்காப் பயணம்.

அல்லாமா ம. முஹம்மது உவைஸ். சென்னை 600001: பஷாரத் பப்ளிஷர்ஸ், 16, அரண்மனைக்காரத் தெரு, 1வது பதிப்பு, மே 1987. (சென்னை 600001: திரீயெம் பிரின்டர்ஸ், 92, அரண்மனைக்காரத் தெரு). (8), 324 பக்கம்,