11120 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி ஐந்து: ச,சா.

சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), சீ. தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், 98 வாட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(12), 212 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 27.5×21.5 சமீ.

பல்தொகுதிகளைக் கொண்ட இந்துக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது ஐந்தாவது தொகுதியாகும். இதில் சிறியதும் பெரியதுமான 111 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா, கலாபூஷணம் திருமதி வசந்தா வைத்தியநாதன், திரு. கே.கே.சோமசுந்தரம், செல்வி கல்யாணி நாகராஜா, திரு.க.இரகுபரன், திருமதி சாந்தி மகாசேனன், திருமதி தேவகுமாரி ஹரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்