11121 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி ஆறு : சி-சௌ.

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), எஸ். தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(6),vii-xiv, 310 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 27.5×21.5 சமீ.

இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது ஆறாவது தொகுதியாகும். இதில் இந்து சமயம் தொடர்பான தகவல்கள் சி முதல் சௌ வரையிலான அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. இத்தொகுதிக்கான எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வி.சிவசாமி, கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திரு க.இரகுபரன், திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி நித்தியவதி நித்தியானந்தன், பேராசிரியர் வே.சேதுராமன், பேராசிரியர் கு.வேலுசாமி, பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கலாநிதி மா.வேதநாதன், கே.கே.சோமசுந்தரம், கலாநிதி இராமசேஷன் இரா.கிருஷ்ணன், க.சிவாநந்தமூர்த்தி, திருமதி கல்யாணி நடராஜா, ஸ்ரீபத் சர்மா, வ.சிவராஜசிங்கம், செல்வி கே.உமாசந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 111 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Magic Jewels Kostenlos Spielen Ohne Anmeldung

Content Casino sunnyplayer – Secret Of Amun Juwelenspiel Spiele Von Coolgames Sind Online Spielautomaten In Deutschland Legal? Jewels Spiele Kostenlos Online Spielen, Ohne Anmeldung Die