சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), எஸ். தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்; 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
(6), vii-xi, 328 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 27.5×21.5 சமீ., ISBN: 955-9233-07-6.
இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது ஏழாவது தொகுதியாகும். இதில் இந்து சமயம் தொடர்பான தகவல்கள் ஞா முதல் தி வரையிலான அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. இத்தொகுதிக்கான எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வி.சிவசாமி, பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், பேராசிரியர் தி.ஞானகுமாரன், திரு க.இரகுபரன், திருமதி இந்திரா சதானந்தன், திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி நித்தியவதி நித்தியானந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 205 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.