வண்ணைநகர் ஸ்ரீ க.வைத்தியலிங்க பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ். செந்தமிழ்ப் பரிபாலன யந்திரசாலை, 1வது பதிப்பு, 1926. (அச்சக விபரம் தரப்படவில்லை).
43 பக்கம், விலை: 25 சதம், அளவு: 19×13 சமீ.
ஆலய வழிபாட்டின் மகத்துவம், விக்கிரக வணக்கத்தின் விசிட்டம், மரணத்தைக் கடக்கச் சிவத்தியானமன்றி வேறு வழியில்லை, கடவுளைத் துதித்து எக்கருமமும் புரிமின், கடவுள் கோபமுள்ளவரா?, அந்நிய சமயிகளது ஆலயங்களிற் சைவர்கள் வழிபாடு செய்யலாமா? இம்மைப்பற்று நீங்காதாரின் செயல் இறைவன் செயலாமோ? சைவப் பிரசங்க மகத்துவம், சிவவதையும் மாமிச பக்ஷணமும் செய்யலாமா? அன்னதான மகிமை, வெகுளியே பாவங்கட்கெல்லாம் வித்து ஆகிய தலைப்புகளில் இந்நூலில் பல்வேறு சைவ சமய விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2451).