தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ வித்தியாவிருத்திச் சங்கம், கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xviii, 460ூ47 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-42192-1-2.
மரபவழிக் கல்விப் புலமையாளரான நீர்வேலி சிவசங்கர பண்டிதர் (1829-1871) ஈழத்தில் சைவசித்தாந்த புலமையாளர்களில் முக்கியமானவர். தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் துறைபோகக் கற்றவர். நான்கு தமிழ் நூல்களையும், இரண்டு சம்ஸ்கிருத நூல்களையும் ஐந்து நூல்களுக்கு தமிழுரையும், சம்ஸ்கிருத தமிழ் அகராதியையும் ஆக்கியவர். இந்நூலில் அவர் எழுதிய சைவப்பிரகாசனம், சபிண்டீகரணச் சிரார்த்த விதி, கிறிஸ்துமத கண்டனம், சற்பிரசங்கம், மிலேச்சமத விகற்பம், பிராசாத சட்சுலோகி (உரை), தாதுமாலை ஆகிய 7 நூற்பிரதிகள் தேடித்தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர் பிற நூல்களுக்கு எழுதிய சிறப்புரைகளும்; பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. நூன்முகமாக ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்களது சரித்திரத்தை அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசாமிக் குருக்கள் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான தி.செல்வமனோகரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து மெய்யியல் சிறப்புக் கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றவர். அப்பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61687).