நாகேந்திரம் கருணாநிதி. லண்டன் E6 2HD: 109, Caledon Road, East Ham, 1வது பதிப்பு, 2017. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட்).
vii, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
நூலாசிரியர் நாகேந்திரம் கருணாநிதி, சைவசித்தாந்தத்தைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஐரோப்பிய சைவசித்தாந்த ரத்தினப் பயிற்சி மையமாகிய லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தில் சைவசித்தாந்த ரத்தினம் பட்டம் பெற்றவர். தாயகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த இவர், புலம்பெயர்ந்து லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார். இந்நூலில் ஆலய வழிபாடு, ஐயம் தெளிதல், ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களின் தத்துவம், பஞ்சபுராணம், தத்துவமசி, தைப்பொங்கல், பிரதோஷம், அபிராமிப்பட்டர் விழா, தைப்பூசம், சிவராத்திரி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கேதாரகௌரி விரதம், தீபாவளி, கந்தசஷ்டி, கார்த்திகை விளக்கீடு, பிள்ளையார் பெரும்கதை விரதம், திருவெம்பாவை ஆகிய 18 தலைப்புகளின்கீழ், சைவசமய வழிபாடு பற்றியும் சைவர்கள் அனுஷ்டிக்கும் விரதங்கள் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.