சி.விசலாட்சி. பேலியகொடை: ஸ்ரீ பூபால விநாயகர் ஆலயம், 212, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).
xiii, 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
சைவ சிகாமணி, சிவமயச் செல்வி புலவர் சி.விசாலாட்சி ஏழாலை, குப்பிளானைச் சேர்ந்தவர். கிளிநொச்சி குருகுலத்தை வாழ்விடமாகக் கொண்டவர். ஆலயம், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டும், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சைவ நாற்பாதங்கள் காட்டும் ஆலய வழிபாட்டின் மூலம் அடையக்கூடிய நற்பேறுகளைப் பற்றி பெரியபுராணத்தில் அதிகமாகக் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டும் இந்நூலை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கான ஆசியுரைகளை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரியார், ஸ்ரீ பூபால விநாயகர் கோவில் அறங்காவலர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத் தலைவர், ஸ்ரீ தம்பையா அடிகளார் ஆகியோர் வழங்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13483).