11131 தர்மம் அறிந்து வாழவேண்டும்.

மார்க்கண்டேய ரிஷி தாஸ். யாழ்ப்பாணம்: அருள்திரு மார்க்கண்டேய ரிஷி தாஸ், 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் நிறுவனம், இல. 681, காங்கேசன்துறை வீதி).

xii, 149 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. 

அருள்திரு மார்க்கண்டேய ரிஷி தாஸ், மலேசியா-இஸ்கான் பிரதேசத்திலிருந்து ஹரே கிருஷ்ண இயக்கத்தினைச் சார்ந்து இயங்குபவர். அவ்வமைப்பின் தாபகரான அ.ச.பக்திவேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதாவின் உபாசகரான இவர், ஸ்ரீமத் பாகவதத்தின் அடிப்படையில் எழுதிய  12 உரைகள் இதில் அடங்குகின்றன. தர்மம் என்றால் என்ன?, நைமித்திக தர்மம் (உடல் தர்மம்), நித்திய தர்மம் (ஆத்ம தர்மம்), இந்து மதத்தில் 16 ஸம்ஸ்காரங்கள், மனித வாழ்வில் நான்கு துன்பங்களும் அதற்கான காரணங்களும், மனிதனுக்கான ஐந்துவித கடன்களும் தோஷங்களும், வாழும் கலையும் சாகும் கலையும், உயர்ந்த பக்தியும் உன்னதமான பக்தனும், உங்கள் வெற்றி உங்கள் கையில், கலியுக தர்மம், குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை, ஸ்ரீல பிரபுபாதா ஆகிய தலைப்புகளில் இவை பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13716 விடை தேடி.

தம்பிலுவில் ஜெகா. தம்பிலுவில் 2: பொதிகை வெளியீடு, 1வது பதிப்பு, 2015. (தம்பிலுவில்: எம்.ஆர்.எஸ். ஓப்செட் அச்சகம்). 100 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41466-0-0. 1980 முதல்