க.இ.குமாரசாமி (புனைபெயர்: கோவைக்கிழார்). கோப்பாய்: அரவிந்த வாசம், கிளுவானை வீதி, 1வது பதிப்பு, 2005. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xii, 172 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.
இந்து சமயத்தை பொதுவாக முன்வைத்து அதன் விரிந்த பெரும்பரப்பில் சேகரித்த ஏராளமான தகவல்களை பல்வேறு குறுந்தலைப்புகளின்கீழ் தொகுத்துத் தந்துள்ளார். இலங்கையின் பூர்வீக மக்கள், திராவிடத் தோற்றம், சமணத் தாக்கம், சோழர் வருகை, ஆரியர் வருகை, கஜபாகு மன்னனும் கண்ணகி வழிபாடும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், பன்னிரு திருமுறைகள், ஐரோப்பியர் வருகையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும், ஆங்கிலேயர் ஆட்சி, ஆறுமுக நாவலர், நாவலரைத் தொடர்ந்து ஏற்பட்ட விழிப்புணர்ச்சி, இலங்கையில் இந்துக்கள், உலகில் மதவழிபாடுகள், இந்துமதம், உலகின் மொத்தக் குடிசனத்தொகை, உலகின் சனத்தொகை மதரீதியாக, இந்து மதத்தின் நால்வகை வழிபாடுகள், சைவக் கடவுளர்கள், கண்ணகி, சைவக்கிரியைகளில் கும்பம் வைத்தல், ஆலய அமைப்பும் கிரியைகளும், சைவப் பண்டிகைகள், இந்தியாவில் பாடல்பெற்ற திருத்தலங்கள், இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்கள், சித்தாந்த சாஸ்திரங்கள், இறைவனின் மறைத்தல் தத்துவம், மனிதனின் தோற்றம் மூவகை உடம்பு, தமிழ்மொழியில் பூசை வழிபாடுகள், புலம்பெயர்ந்தோரின் இந்துமத வழிபாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்துமத வழிபாடுகள் என இன்னோரன்ன மிக விரிவான உலகளாவிய சமய விடயங்களை குறுந்தலைப்புக்களின்கீழ் இந்நூலில் சுருக்கமாக தொகுத்து வழங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36717).