சங்கர பண்டிதர் (மூலம்), வே.காராளபிள்ளை (தொகுப்பாசிரியர்). கொழும்பு: வே.காராளபிள்ளை, முன்னாள் கொழும்புத் திறைசேரிக் கிளாக்கர், 1வது பதிப்பு, 1910. (யாழ்ப்பாணம்: வித்தியாநுபாலன அச்சகம், வண்ணார்பண்ணை).
62 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.
யாழ்ப்பாணத்து நீர்வேலி சிவ சங்கர பண்டிதர், நாவலர் காலத்தில் இருந்த தமிழறிஞர். நாவலரின் சைவத்தமிழ்ப்பணிகளில் துணைநின்றவர். நாவலரைப் போலவே இவரும் தனியாகச் சைவப் பிரசாரத்திலும் கிறிஸ்தவமதம் பரவுதலைத் தடுப்பதிலும் பேரூக்கமுடையவராக விளங்கியவர். இந்தியாவிலும் புகழ்பெற்றிருந்த முருகேச பண்டிதர், திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் சபாபதி நாவலர் ஆகியோர் இவரது மாணவர்களாவர். சிவதூஷண கண்டனம், பரபக்ஷம், பதில~ணம், பசுல~ணம், பாசல~ணம், பரபக்ஷகண்டனம், முத்திசாதனம், பதிவிசேஷ நிரூபணம் ஆகிய தலைப்புகளில் இவரது உரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2917).