11139 வழிபாடும் பிரார்த்தனையும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய் வீதி, கந்தசாமி கோவிலடி).

iv, 72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.

வழிபாடு, பிரார்த்தனை ஆகிய இரு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ள இந்நூலில் வழிபாடு என்ற முதலாம் பிரிவின்கீழ் வாழ்க்கையும் வழிபாடும், இந்துசமயப் பழக்க வழக்கங்கள், விரதங்கள், மகோற்சவ விளக்கம் ஆகிய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பிரார்த்தனை என்ற இரண்டாவது பிரிவில் சில விநாயகர் துதிப்பாடல்கள், மஹோற்சவ காலத் திருமுறைகள், திருப்பல்லாண்டு (தேர்த்திருவிழா), திருப்பொற்சுண்ணம் (தீர்த்தம்), திருக்கதவம் திறக்கும் பாடல், மார்கழிப் பாடல்கள், சிவபுராணம், திருப்பொன்னூசல், கோளறு திருப்பதிகம், நவக்கிரகத் துதி, திருவிளக்கப் பாடல், வாணிவிழாப் பாடல், கந்தசஷ்டி கவசம், ஆரத்திப் பாட்டு, பிழை பொறுத்தல் ஆகிய பிரார்த்தனைப் பாடல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60830).

ஏனைய பதிவுகள்