க.சிவபாதசுந்தரக் குருக்கள். யாழ்ப்பாணம்: அகில இலங்கை சைவக் குருமார் அர்ச்சகர் சபை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்; சைவப்பிரகாச அச்சகம்).
19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
வீரபத்திரப் பெருமானின் தோற்றமானது சைவர்களுக்குக் கூறும் அறிவுரை யாதெனில், ‘ஏ மனிதனே நீ அகங்காரம் கொள்ளாதே. சிவநிந்தனை செய்யாதே. இறைவனை விலக்கி இறைவனை முன்வையாத எந்தக் கருமத்தையும் செய்யாதே. அப்படிச் செய்தால் நீ தண்டிக்கப் படுவாய்’ என்பதாகக் கருதப்படுகின்றது. வீரபத்திரப் பெருமானின் தோற்றம் கந்த புராணத்தில் தக்ஷகாண்டத்தில் விரிவாகக் கூறப்படுகின்றது. அதன் எளிமையான வடிவமாக இந்நூல் அமைந்துள்ளது. அகில இலங்கை சைவக் குருமார் அர்ச்சகர் சபையின் பத்தாவது வெளியீடு இது. கிரியாவித்தகர் குருமணி சிவஸ்ரீ க.சிவபாதசுந்தரக் குருக்கள் தெல்லிப்பளை மயிலிட்டி தெற்கில் வாழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9451).