வே.வல்லிபுரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், புதிய செயலகம், திருத்திய 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: திசர அச்சகம்).
viii, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒ13.5 சமீ.
சைவ நெறி: ஏழாம் வகுப்பு.
சொர்ணவதி மாசிலாமணி (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 8வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1976, 2வது பதிப்பு, 1981, 3வது பதிப்பு, 1982, 4வது 5வது பதிப்புகள், 1985, 6வது பதிப்பு, 1986, 7வது பதிப்பு, 1987.(கொழும்பு: திசர அச்சகம்).
x, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ.
இந்நூலில் எமது சமயம், திருக்கோயில், ஆலயத் தொண்டு, கோயிற்பூசை, திருக்கோணேச்சரம், பொன்னம்பலவாணேச்சரம், விநாயகர் வழிபாடு, முருக வழிபாடு, விரதங்கள், சைவப் பண்புகள், மெய்ப்பொருள் நாயனார், குங்குலியக் கலய நாயனார், கந்தபுராண கலாச்சாரம், ஸ்ரீ இராமகிருஷ்ணர், யோகர் சுவாமிகள், சம்பந்தர் தேவாரம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், கந்த புராணம், திருப்புகழ், திருக்குறள் ஆகிய 25 தலைப்புகளில் சைவநெறி பற்றிய பாடங்கள் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக இந்துசமய, பௌத்த சமய, முஸ்லிம், கிறிஸ்தவ சமயப் பண்டிகைகள், பெருநாள்கள், திருவிழாக்கள் பற்றிய விளக்கப் பட்டியல் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12664).