11146 சைவ போதினி மேற்பிரிவு 1 (க.பொ.த.ப. முதலாம் வருட வகுப்புக்குரியது). 

நூலாக்கக்குழு. கொழும்பு: விவேகானந்த சபை,  1வது பதிப்பு, 1960. (கொழும்பு 11: ஸ்டான்காட் பிரின்டர்ஸ்).

(4), 192 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 2.25, அளவு: 18×12 சமீ.

கொழும்பு விவேகானந்த சபை நடத்தும் அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட நூல்.  சைவசமயத்தின் தத்துவார்த்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள், நாயன்மார் சரிதங்கள், புராணக் கதைகள், சைவத் திருமுறைகள் என்பன இப்பதிப்பில் இலகுவாகப் போதிக்கப்படக்கூடிய வகையில் சைவசமயப் பொது அறிவு, திருக்குறள் (அறத்துப்பால்-துறவறவியல்), வரலாறுகளும் கதைகளும், கந்தபுராணச் சுருக்கம், அருட்பாடல்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் வகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16646).

ஏனைய பதிவுகள்

12600 – உயர் தர மாணவர் ; பௌதிகம் : காந்தவியலும் மின்னியலும் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: அ.கருணாகரர், இல.8, வைமன் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1971. (யாழ்ப்பாணம்: த.வேலாயுதபிள்ளை, நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி). (4), 392 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.90, அளவு: