தமிழவேள் (இயற்பெயர்: க.இ.கந்தசாமி). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி).
(2), 118 பக்கம், விலை: ரூபா 3., அளவு: 21×14 சமீ.
கல்விப் பொது உயர்நிலைச் சான்றிதழ் தேர்வுக்குரிய முறையில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணம் 128 திருவிருத்தமுடையது. இவற்றில் முன் 47 திருவிருத்தம் திருக்குறிப்புத் தொண்டருடைய தொண்டைநாட்டின் சிறப்பையும் 63 திருவிருத்தம் அவர் பிறந்து வாழ்ந்த இடமாகிய காஞ்சியம் பேரூரின் சிறப்பையும், ஏனைய 55 திருவிருத்தமும் அவரது வரலாற்றுச் சிறப்பையும் கூறுகின்றன. செய்யுள்களுக்குரிய உரை விளக்கத்தை எளிய நடையில் தமிழவேள் க.இ.கந்தசாமி அவர்கள் வழங்கியுள்ளார். சமய உண்மைகளை இலக்கிய வடிவில் இச்செய்யுள்கள் உணர்த்துகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4841).