பெரியதம்பிப்பிள்ளை தருமலிங்கம். செங்கலடி: பெ.தருமலிங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1981. (மட்டக்களப்பு: அர்ச் செபஸ்தியார் அச்சகம்).
18 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 21×13.5 சமீ.
செங்கலடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வரலாறு, செங்கலடி ஸ்ரீ சித்திவிநாயகர் பதிகம், செங்கலடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஊஞ்சல், செங்கலடி ஸ்ரீ சித்திவிநாயகர் மங்களம் ஆகிய நான்கு தலைப்புகளின்கீழ் இச்சிறுநூல் விரிகின்றது. 1980 ஆவணி 29இல் புனருத்தாரணம் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்ட மேற்படி கோவிலின் வரலாறு ஆயுர்வேத வைத்தியர் கிருஷ்ணபிள்ளைச் சுவாமியார் வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதி கட்டுரை உருவில் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11072).