ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம். திருக்கேதீச்சரம்: ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம், திருவாசக மடம், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
திருக்கேதீச்சரம்-திருவாசக மடம் மகேசுரபூசை மண்டபம், 1972 திருவாசக விழா விபரங்கள் அடங்கிய திருவாசகத் தேன்மலர். இதில் சிறப்புக் கட்டுரைகளாக ஆரம்பகாலத்துப் பணிகள் (மு.தியாகராசா), திருவாசக மடமும் சாதனைகளும் (மு.சிவராசா), முடிவுகட்டி விடாதீர்கள் (அ.மு.பரமசிவானந்தம்), பழம் பாடல்களின் வரிகள் (சுந்தர பிரேமசம்பு) ஆகிய நான்கு ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4609/9499).