ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அறங்காவலர் சபை. இலங்கை: உதயமலர்,அமரர் பரமலிங்கம் உதயகுமாரன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
(4), 80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய அறங்காவல் சபையின் வெளியீடுகளான நாகம் பூஷித்த நயினை, தோத்திரப் பாக்களின் தொகுப்பு ஆகிய நூல்கள் இவ்வெளியீட்டின் வழியாக சபையின் அனுமதியுடன் மீள்பிரசுரம் கண்டுள்ளன. பூர்வீக இலங்கை (நாகர், நாக வழிபாடு), நயினாதீவு நந்தாப் புகழ்வாய்ந்த நயினைத் தலச் சிறப்பு, நாகேஸ்வரி ஆலயம் ஆகிய மூன்று கட்டுரைகளையும், நயினாதீவு நாகேஸ்வரி அம்மை பதிகம், நயினை ஊஞ்சல், ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கோவில் உள்வீதி சுற்றுப் பிரகாரத் தோத்திரப் பாக்களின் தொகுப்பு ஆகிய பக்தி இலக்கியங்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45694).