க.கைலாசபதி (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, 4, ஹோட்டன் ரெறஸ், 1வது பதிப்பு, மார்கழி 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(4), 336 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் 100ஆவது குருபூசையின் நினைவாக வெளியிடப்பட்ட நாவலர் நூற்றாண்டு மலர் இது. மலர்க்குழுவின் தலைவராக பேராசிரியர் க.கைலாசபதியும், உறுப்பினர்களாக பேராசிரியர் கா.சிவத்தம்பி, கலாநிதி பொ.பூலோகசிங்கம், கலாநிதி அ.சண்முகதாஸ், திரு. ச.அம்பிகைபாகன், திரு. நா.சுப்பிரமணியம், திரு. ஆ.சிவநேசச்செல்வன் ஆகியோர் இயங்கினர். இம்மலர் பல்துறை நோக்கில் நாவலர், வழி வழி நாவலர், வரலாற்றில் நாவலர், நாவலர் திரட்டு ஆகிய நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவ்வப் பிரிவில் அடங்கும் ஆக்கங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இறுதிப் பிரிவில் ஆறுமுகநாவலர் தொடர்பான நூல்விபரப்பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதனை இ.கிருஷ்ணகுமார், ஆ.சிவநேசச் செல்வன் ஆகியோர் தொகுத்திருக்கின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24027).