குடாரப்பூர் வைத்தியர் செல்லப்பா கணபதிப்பிள்ளை. கிளிநொச்சி: நா.வீரகத்திப்பிள்ளை, பூசகர், ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், புளியம்பொக்கணை, 1வது பதிப்பு,மே 1960 (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.
வடபுலத்தின் கரைச்சிப் பகுதியில் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கும் புளியம்பொக்கணை ஸ்ரீ நாகதம்பிரான்ஆலய உற்சவப் பெருமைகளையும் அங்கு பலகாலமாக மெய்யடியார்கள் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் பௌர்ணமியோடு கூடிய உத்தர தினத்தன்று பெரும் பொங்கல் விழாச் செய்து இறைவன் புகழ்பாடிப் பரவுதலையும் கருத்திற்கொண்டு இந்நூலை வைத்தியர் செ.கணபதிப்பிள்ளை இயற்றி 16.5.1960இல் வெளியிட்டிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25773).
புளியம்பொக்கணைத் தலபுராணம்: உரையுடன்.
குடாரப்பூர் வைத்தியர் செல்லப்பா கணபதிப்பிள்ளை (மூலம்), கணபதிப்பிள்ளை குமாரசாமி (உரையாசிரியர்). கிளிநொச்சி: நா.வீரகத்திப்பிள்ளை, பூசகர், ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், புளியம்பொக்கணை, 2வது பதிப்பு, மார்ச் 1994, 1வது பதிப்பு, மே 1960 (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி).
(6), 76 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21.5×14 சமீ.
இந்நூலின் மூலப்பிரதியை வைத்தியர் செ.கணபதிப்பிள்ளை இயற்றி 16.5.1960இல் வெளியிட்டிருந்தார். அவரது புத்திரனார் குமாரசுவாமி அவர்கள் தந்தையாரின் செய்யுள்களுக்குப் பொழிப்புரை எழுதி இந்நூலைப் புதுக்கிய பதிப்பாக வெளியிட்டிருக்கிறார். காப்பு, கடவுள் வணக்கம், பாயிரம், புராதனச் சருக்கம், வைபவச் சருக்கம், தெய்வீகச் சருக்கம், அதிசயச் சருக்கம் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42111).