11160 மயூரகிரி புராணம்.

வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை (பொழிப்புரை). ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (விசேடவுரை). யாழ்ப்பாணம்: ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதனப் பத்திராசிரியரும், 2வது திருத்திய பதிப்பு, ஐப்பசி 1937, 1வது பதிப்பு, 1885. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை).

எiii, 204 பக்கம், விலை: ரூபா 1.75, அளவு: 22×14 சமீ.

மயூரகிரி என்பது பாண்டி நாட்டிலே தேவாரம் பாடப்பெற்ற சிவத்தலங்களுள் ஒன்றாகிய திருப்புத்தூருக்குச் சமீபத்திலுள்ள சுப்பிரமணியக் கடவுளுக்குரிய குன்றக்குடி என்ற முக்கிய திருத்தலமாகும். இம்மயூரகிரிப் புராணம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த சிவகங்கை வித்துவான் வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரால் வடமொழி மயூரகிரி மான்மியத்தினின்றும் மொழிபெயர்த்துப் 13 சருக்கங்களுடயதாகச் செய்யுள்நடையில் இயற்றப்பட்டது. இந்நூல்  கலியுகவரதனாகிய சுப்பிரமணியப் பெருமானது மகிமையையும் அவர் தம்மை மெய்யன்போடு வழிபட்ட அன்பர்களுக்கு வேண்டியவற்றை வேண்டியாங்கு ஈந்தருளிய தன்மையையும் புலப்படுத்துகின்றது. முதற்பதிப்பின் இறுதியிற் காணப்பெற்ற ‘தெய்வநாயகி திருமணச் சருக்கம்’ வடமொழி மூலநூலிற் காணப்படாமையினாலும், யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அராலியில் வசித்த ஒரு பிராமணராற் புதிதாய்ப் பாடிச் சேர்க்கப்பட்டமை சந்தேகமின்றித் தெரிந்தமையாலும் வடதேயத்திலுள்ள ஏட்டுப் பிரதிகளில் இது தவிர்க்கப்பட்டமையாலும் திருத்திய இரண்டாம் பதிப்பிலும்; தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 958).

14A37 வித்துவான் வேதாந்த சுப்பிரமணியபிள்ளை இயற்றிய மயூரகிரி புராணம்.

வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை (பொழிப்புரை). ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (விசேடவுரை). தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,  3வது மீள்பதிப்பு, 2018, 2வது திருத்திய பதிப்பு, ஐப்பசி 1937, 1வது மூலப் பதிப்பு, 1885. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xviii, 204 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-9233-54-1.

மயூரகிரி என்பது பாண்டி நாட்டிலே தேவாரம் பாடப்பெற்ற சிவத்தலங்களுள் ஒன்றாகிய திருப்புத்தூருக்குச் சமீபத்திலுள்ள சுப்பிரமணியக் கடவுளுக்குரிய குன்றக்குடி என்ற முக்கிய திருத்தலமாகும். இம்மயூரகிரிப் புராணம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த சிவகங்கை வித்துவான் வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரால் வடமொழி மயூரகிரி மான்மியத்தினின்றும் மொழிபெயர்த்துப் 13 சருக்கங்களுடையதாகச் செய்யுள்நடையில் இயற்றப்பட்டது. இந்நூல்  கலியுகவரதனாகிய சுப்பிரமணியப் பெருமானது மகிமையையும் அவர் தம்மை மெய்யன்போடு வழிபட்ட அன்பர்களுக்கு வேண்டியவற்றை வேண்டியாங்கு ஈந்தருளிய தன்மையையும் புலப்படுத்துகின்றது. முதற்பதிப்பின் இறுதியிற் காணப்பெற்ற ‘தெய்வநாயகி திருமணச் சருக்கம்’ வடமொழி மூலநூலிற் காணப்படாமையினாலும், யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அராலியில் வசித்த ஒரு பிராமணராற் புதிதாய்ப் பாடிச் சேர்க்கப்பட்டமை சந்தேகமின்றித் தெரிந்தமையாலும் வடதேயத்திலுள்ள ஏட்டுப் பிரதிகளில் இது தவிர்க்கப்பட்டமையாலும் திருத்திய இரண்டாம் பதிப்பிலும்; தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 11160).

ஏனைய பதிவுகள்