11161 முடிமன்னர் பதிகம்.

மு.க.சூரியன். கோப்பாய்: வே.மு.கந்தப்பு, நஞ்சன் வளவு, கோப்பாய் தெற்கு, 1வது பதிப்பு, தை 1961. (கொழும்பு 14: வீரகேசரி அச்சகம், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

16 பக்கம், விலை: சதம் 30, அளவு: 21×13 சமீ.

யாழ்ப்பாணம்- கோப்பாய் தெற்கு நஞ்சன் வளவில் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கும் முடிமன்னர் பேரில்  யாத்த பதிகம் இது. இந்நூலாசிரியர் கவிஞர் மு.க.சூரியன் கோப்பாய் தெற்கைச் சேர்ந்தவர். செய்யுள்கள் ஒவ்வொன்றிலும் சிவபெருமானின் திருவிளையாடல்களையும் காப்பியங்களின் சாராம்சங்களையும் புகுத்தித் தானும் பரவசமடைந்து படிப்பவர்களையும் பரவசமடையச் செய்ய முயன்றுள்ளார். சேர். கந்தையா வைத்தியநாதன், பேராசிரியர் க.ச.அருள்நந்தி ஆகியோர் முறையே முகவுரையும் சிறப்புப்பாயிரமும் வழங்கியுள்ளனர். நூலாசிரியர்  கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2521).

ஏனைய பதிவுகள்

17762 கயல்விழி.

ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம்;, புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை: