11167 ஸ்ரீ ராமகான சபா: இலங்கை பிராமணர் சங்கம் 1939-2014.

பவள விழா மலர். ஞானலக்ஷ்மி ஞானசேகர ஐயர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: ஸ்ரீ ராம கான சபா, இல.57, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxxiv, 116 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

1939இல் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ராம கான சபா இலங்கை பிராமணர் சங்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் வெளியிட்டுள்ள சிறப்பு மலர் இதுவாகும். நான்கு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் இயல் ஆசியுரைகளையும், இரண்டாம் இயல் தத்துவம்-வழிபாடு பற்றிய 15 கட்டுரைகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது. மூன்றாம் இயலில் ஜோ.சிவராமசர்மா எழுதிய ஈழத்துப் பிராமணர் வரலாறு பற்றிய  வரலாற்று ஆவணமும், நான்காம் இயலில் வாழ்நாள் சாதனையாளர் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இறுதியில் சிவானந்த விஜயம், இந்துக் கலைக்களஞ்சியம் ஆகிய வெளியீடுகளிலிருந்து சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மலரின் பிரதான பகுதியாகிய இரண்டாம் இயலில் உள்ள கட்டுரைகள் உபாகர்மா (பிரம்மஸ்ரீ க.ஆனந்தகுமாரக் குருக்கள்), இலங்கையின் இந்து மதத்தில் விஷ்ணு வழிபாடு (சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்), முகூர்த்த நிர்ணயம் (பிரம்மஸ்ரீ சி.ஜெகதீஸ்வர சர்மா), வேத மந்திரங்களுக்காக உருவான சமஸ்கிருத மொழியின் சிறப்பு (சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாசாரியார்), தர்ப்பை (சிவஸ்ரீ கருணாகர சுரேஷ்வரக் குருக்கள்), வேதத்தில் ஆயுர்வேதம் (டாக்டர் ஜெ.சுபாஜனனி), பீஜாஷரம் (பிரம்மஸ்ரீ தி.கி.சீதாராம சாஸ்திரிகள்), எம்மொழியில் அர்ச்சனை? (சுவாமி சித்பவானந்தர்), கூஷ்மாண்ட ஹோமம்: வேதம் கூறும் ஒரே ஹோமம் (ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள்), சமயம் கடந்த கம்பன் (திருமதி வசந்தா வைத்தியநாதன்), சைவசமய மரபில் சிவாகமங்களின் சிறப்பு ஒரு பொது நோக்கு (கலாநிதி மஹேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா), இன்றைய தகவல் உலகுடன் இணைந்து வாழும் மொழியாக சம்ஸ்கிருதம்: ஓர் ஆய்வு (நவநீதகிருஷ்ணன்), வைஷ்ணவ ஆகமங்கள்- ஒருநோக்கு (பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன்), நித்யகர்மானுஷ்டானம் (டாக்டர் டீ.எஸ்.சண்முக சிவாச்சாரியார்), சடங்குகள்-சம்ஸ்காரங்கள் (திருமதி ஞானலக்ஷ்மி ஞானசேகர ஐயர்) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்