ஞானா சிவசுப்பிரமணியம், சொ.கணேசநாதன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம்).
(18), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
இந்த தர்மம் (யோகி சுத்தானந்த பாரதியார்), ஆசிரியர் எழுதுகோலிலிருந்து, அறம் (சைவப்புலவர் த.குமாரசாமிப்பிள்ளை), யாஅம் இரப்பவை (பண்டிதர் கா.பொ.இரத்தினம்), நினைவு நல்லது வேண்டும் (சி.தில்லைநாதன்), இலங்கையில் இந்து சமயம் (குல சபாநாதன்), எம்பெருமான் தூது செல்லாயோ?, மாணிக்கவாசகரின் ஆத்மீக யாத்திரை (ச.அம்பிகைபாகன்), சகலகலாவல்லி (ராஜபாரதி), மருதம் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), பத்தி (ஜெ.செந்தில்நாதன்), சைவத்தின் இரு கண்கள் (அருள்), ஆதிகால மனிதனும் அவன் கண்ட சமயமும் (பண்டிதை பத்மாசனி அம்மாள் இராசேந்திரம்), மாணிக்கவாசகர் ஒரு வழிகாட்டி, உதிர்ந்த மலர், பூசலார் புதுமைக் கோயில் (ஆ.கந்தையா) ஆகிய 16 முக்கிய ஆக்கங்களுடன் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தின் ஆண்டிதழாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45465).