மலர்க்குழு. சுழிபுரம்: அறங்காவலர் சபை, அருள்மிகு பறாளை ஈசுரவிநாயகர் திருக்கோவில், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இற்றைக்கு சுமார் 500ஆண்டுகளுக்கு முன்னர் சுழிபுரம்வாழ் மருதநில மக்களுக்காக அரசன் கதிர்காமசேகரன் கட்டுவித்த கோவிலே பறாளை ஈசுரவிநாயகர் கோவிலாகும். தொடர்ந்து வந்த அரச பரம்பரையினரும் 1920 வரை ஆலயத்தை சிறப்பாக நிர்வகித்து வந்தனர். மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னரும்கூட சுழிபுரம் வாழ் மக்கள் தம் விளைநெல்லின் ஒரு பங்கை மேற்படி கோவிலுக்குக் காணிக்கையாகச் செலுத்திவந்துள்ளனர். சேர்.பொன் இராமநாதன் அவர்கள் 1912இல் கோவில் சார்பில் பிரபு ஆறுமுகத்துக்கு வழங்கிய ஆலய கோமுகைக்கல் இன்றும் வரலாற்றுச் சிறப்புடன் அங்கு பேணப்படுகின்றது. இத்தகைய சிறப்பமிக்க ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா 2003இல் நடந்தேறியபோது இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34953).