மலர்க் குழு. இணுவில்: திருநெறிய தமிழ்மறைக் கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி).
xxiii, 294 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 27×19 சமீ.
இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியது. யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான ‘பரராஜசேகரன்’ என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது. 14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். பரராஜசேகர மன்னன் காலம் (1478-1519) வரையாகும். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் இவ்வாலயத்தை கட்டினான். இதனால் இவ்வாலயத்திற்குப் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என்னும் திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆலய உட்பிரகாரத்தில் மன்னனும் பிரதானிகளும் வழிபடுங்காட்சி சிற்பமாகவும்,ஓவியமாகவும் வரையப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து இணுவில் நான்காவது மைல் தூரத்தில் உள்ளது. இணுவில் ஓர் அழகிய கிராமம். இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அழகு செய்ய நடுநாயகமாகப் பரராஜசேகரப்பெருமான் அருள்பாலிக்க சித்தர்களும், பக்தர்களும், கலைகளும், கலைஞர்களும், வாழுகின்ற திருவூராக விளங்குகின்றது. இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் 2009இல் கும்பாபிஷேகம் கண்டவேளையில் உரவாக்கப்பட்ட இம்மலரில், 82 சைவ சமயப்படைப்புக்கள், பாமாலைகள் உள்ளடங்கலாக இடம்பெற்றுள்ளன.