கே.கே சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: கே.கே சுப்பிரமணியம், அறுகம்புலம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
காரைநகர் திருமணற்காடு அருள்மிகு கும்பநாயகி முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சுங்க இலாகாவில் பணிபுரிந்து பிரபலமாகிய சைவ சமய அபிமானியும் சமூக செவையாளருமாகிய திருவாளர் கே.கே.சுப்பிரமணியம் அவர்களின் முன்னோர்களால் பல நுற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்து குலதெய்வமாகப் பூசிக்கப்பட்டும் பரிபாலிக்கப்பட்டும் வந்துள்ளது. இந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற திருவிழாவில் இரண்டாம் நாள் மகோற்சவத்தை பெருவிழாவாக அன்னாரின் முன்னோர்களும் அவர்களின் உறவினர்களும் நடாத்திவந்துள்ளனர். முன்னோர்களின் மரபைப் பின்பற்றி இந்நாட்களில் திரு.சுப்பிரமணியம் அவர்களும், அவரின் குடும்பத்தினரும் உற்சவங்களை வெகு சிறப்பாகச் செய்கின்றனர். இம்மலர் அவ்வகையில் 19.03.2003 அன்று திருவிழாவின் போது வெளியிடப்பட்டுள்ளது. திருவிழாத் தகவல்களையும், ஆசியுரைகளையும், ஆன்மீகச் செய்திகளையும் உள்ளடக்கியதாக இம்மலர் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31325).