தம்பிஐயா தேவதாஸ் (பதிப்பாசிரியர்). புங்குடுதீவு: மலர்க் குழு, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (கொழும்பு 13: சன்பிரின்டெக், 44 ஏ, கதிரேசன் வீதி).
(8), 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.
30.03.2005 அன்று இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலரின் உள்ளடக்கம் கட்டுரைப் பகுதி, திருப்பணியாளர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கட்டுரைப் பிரிவில் இராஜராஜேஸ்வரி அம்பாள் மேல் எழுந்த திருவூஞ்சல் (சி.ஆறுமுகம்), புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு (சின்னத்தம்பி கோபாலபிள்ளை), புங்குடுதீவுக் கோயில்களும் பண்பாடும்: ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் (வி.சிவசாமி), புங்குடுதீவு என்ற பெயர் எப்படி வந்தது (தம்பிஐயா தேவதாஸ்), தீவகம்- வரலாற்று நோக்கு (கா.குகபாலன்), சக்தி வழிபாடும் சாக்த தந்திரங்களும் (மா.வேதநாதன்), அறிவே தெய்வம் (முருக.வே.பரமநாதன்), மன்னார் முதல் மாத்தறை வரையில் பழம்பெரும் ஈஸ்வரங்கள் (த.மனோகரன்), மனம் போல வாழ்வு (தங்கம்மா அப்பாக்குட்டி), இலங்கையில் சிறுதெய்வ வழிபாடு பெறும் முக்கியத்துவம் (கி.புண்ணியமூர்த்தி), தெய்வீக வாழ்வு (நா.சோமாஸ்கந்தக் குருக்கள்), கலைகள் (த.இலங்கேஸ்வரன்), தெய்வீகத் திருத்தலங்கள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), இலங்கையில் இந்து சமயம் (கி.லக்ஷ்மண ஐயர்), கண்ணகியம்மன் கதை (நாகமணி சண்முகம்), கடவுளைக் காண்போமா? (ஈழத்து சிவாநந்தன்), மலர் மலர (மு.கனகசபாபதி), தேர் ஓடியது (சி.முத்துக்குமாரு) ஆகிய 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருப்பணியாளர்கள் என்ற பிரிவில் திருவிழா உபயகாரர்கள், தர்மகர்த்தாக்கள், பழைய நிர்வாக சபையினர், நடப்புக்கால நிர்வாக சபையினர், கும்பாபிஷேக புனர்நிர்மாண செயலணிக் குழு, 2005ஆம் ஆண்டிற்கான கும்பாபிஷேக ஒழுங்குபடுத்தல் குழு, வெளிநாட்டில் வாழும் ஆலய கும்பாபிஷேகப் பிரதிநிதிகள், Committee Members of the Paripaalana Sabai and Trustees ஆகிய 8 பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37405, 36243).