மலர்க்குழு. புங்குடுதீவு: இத்தியடிப்புலம் அருள்மிகு நாச்சிமார் தேவஸ்தானம், புங்குடுதீவு கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
xxxii, 163 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 24.5×18.5 சமீ.
23.08.2010இல் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன், இத்தியடிப்புலம் நாச்சிமார் ஆலய வரலாறும் சக்தியின் பெருமையும், புங்குடுதீவில் நாச்சிமார் வழிபாடு, பிரதோஷ மகிமை, சிந்தனைத் துளிகள், தோத்திரப் பாமாலைகள், நிர்வாகசபை அங்கத்தினர் விபரம், கணக்கறிக்கை 2010 ஆவணி தொடக்கம் 2011 புரட்டாதி வரை, நன்றியுரை ஆகிய பத்து விடயங்களை இம்மலர் உள்ளடக்குகின்றது.