மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் று13 9யுநு: ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம், 5, சப்பல் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (இலண்டன்: ஆர். எஸ்.அச்சகம்)
112 பக்கம், புகைப்படங்கள், வண்ணப்படம், சிற்ப ஓவியங்கள், விலை: இலவசம். அளவு: 29.5×21 சமீ.
1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி உருவாக்கப்பட்ட மேற்படி ஆலயத்தின் 25 ஆண்டுக் கால வளர்ச்சியை மதிப்பீடு செய்வதாக இம்மலர் அமைந்துள்ளது. இம்மலரில் கோயிலின் வளர்ச்சிப்பாதை பதிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக உழைத்த அடியார்களும் நன்றியுடன் நினைவு கூரப்பட்டுள்ளார்கள். புகலிடத் தமிழர்களின் இந்துசமய உணர்வு, பணி, பண்பாடு தொடர்பான சில கட்டுரைகளும், இந்து சமயம், கோயில்கள் தொடர்பான சிறுவர்களின் ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.