ஏ.எஸ்.குணசிங்கம் (மலராசிரியர்). கொழும்பு: ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (கொழும்பு 12: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 71, பழைய சோனகத் தெரு).
(58) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 25.5×18 சமீ.
கொழும்பு, ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் 08.12.1993 அன்று நிகழ்ந்த கும்பாபிஷேக வைபவத்தின்போது வெளியிடப்பட்டசிறப்பு மலர். வழமையான ஆசிச்செய்திகள், விளம்பரங்களுடன், கும்பாபிஷேகம் காண்போம் வாரீர் (சோ.குஹானந்த சர்மா), சிவஞானவாரிதி, சைவசித்தாந்த காவலர் ஞானசிரோன்மணி (கு.குருஸ்வாமி), விநாயகர் வழிபாடு, சிவ வழிபாடு, விநாயகர் சஷ்டி விரதம் (பெருங்கதை விரதம்), கந்தவேளைத் துதிப்போர்க்கு வல்வினை போம் (இ.சிவகுருநாதன்), காளி அம்பாள் (ஈசானசிவ சி.குஞ்சிதபாதக் குருக்கள்) ஆகிய ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25205).