சரஸ்வதி புத்தகசாலை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 4வது பதிப்பு, 1964. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).
(17), 267 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 14.5×12 சமீ.
கையடக்கப் பிரசுரமாக வெளிவந்திருக்கும் இந்நூலில், நடராஜப் பத்து, பரமசிவன் தோத்திரம், அவனாசிப் பத்து, அருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலையம்மன் பதிகம், வேமனானந்த சுவாமி பதிகம், ஸ்ரீராமர் தோத்திரம், ஸ்ரீராமர் பதிகம், திருநாமப் பதிகம், கெருடப்பத்து, கஜேந்திரமோட்ச கீர்த்தனை, திருநீற்றுப் பதிகம், சுப்பிரமணியர் விருத்தம், ஆறுமுக சுவாமி விருத்தம், மேற்படி ஆசிரிய விருத்தம், தணிகாசலர் பஞ்சரத்தினம், ஆறுமுக சுவாமி பஞ்சரத்தினம், சண்முகக் கடவுள் பஞ்சரத்தினம், வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம், காமாட்சியம்மன் விருத்தம், அங்காளம்மன் பதிகம், துரோபதையம்மன் விருத்தம், சூரிய நமஸ்காரப் பதிகம், அழுகணிச் சித்தர் பாடல், குதம்பைச் சித்தர் பாடல், சனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம், திருச்செந்தூர் பதிகம், பழனிவேலவர் ஆசிரிய விருத்தம், கதிர்காமவேலவர் செந்திமாலை, கதிர்காம ஆசிரிய விருத்தம், ஸ்ரீ பஞ்சாதீஸ்வரர் கீர்த்தனை, முருகன் புகழ், மாதப் பதிகம், வாரப் பதிகம், கும்பிடு பத்து, தரிசனைப் பத்து, கழுகுமலைப் பத்து, தோத்திரப் பத்து, கந்தர் சரணப் பத்து, கதிரேசப் பத்து, பஞ்சரத்தினத் திருப்புகழ், ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீ ரங்கநாயகர் திரு ஊசல், வேல் பாட்டு, கோலாட்டப் பாட்டு, கோலாட்டக் கும்மி, வடபழநி ஆண்டவர் அருள்வேட்டல், திருமுருகாற்றுப்படை தோத்திரம், சரவணப் பத்து, ஸ்ரீபால தண்டாயுதபாணி விருத்தம், பழநிவேலவர்செந்தி மாலை, கதிர்காம ஆசிரிய விருத்தம், பழநிவேலவர் பேரில் விருத்தம், பழனிவேலர் மாலை, தணிகைமயில் பத்து, தணிகைசேவற் பத்து, தணிகை வேல் பத்து, தணிகைசீர்பாத பத்து, தணிகை மலைப் பத்து ஆகிய பக்திப் பாமாலைகளின் தொகுப்பாக இக்கையடக்க நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 959).