சந்திரா நடராஜா. திருக்கோணமலை: சந்திரா நடராஜா, 1வது பதிப்பு, 1991. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி).
(4), 75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக்கொண்ட செல்வி சந்திரா நடராஜா ஆன்மீக ஈடுபாடும், சமய நம்பிக்கையும் கொண்டவர். இவர் இலங்கைத் திருக்கோயில்களின் பேரில் அவ்வப்போது இயற்றிய அருட்பாடல்களின் தொகுப்பு இது. பக்தியுணர்வு பீரிட்டெழும்போது அவற்றைச் சொற்கட்டுடனும் இசை மரபுடனும் வெளிப்படுத்தி நிற்கும் பக்திப்பாடல்களாக இவை அமைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16653).