11192 எங்கள் கதிர்காமம்.

சி.சின்னையா. சாவகச்சேரி: ச.கை.செல்லையா, தலைவர், கச்சாய் தமிழிலக்கிய மன்றம், கச்சாய், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: சுதந்திரநாத அச்சகம், திருநெல்வேலி).

62 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

கதிர்காமம் சைவமக்களின் நிர்வாகத்திற்கு உட்பட்டுப் தமிழர்க்குரிய பண்பும்-கலாசாரமும் வளரவேண்டும் என்பதே கச்சாய்ப் புலவர் சின்னையாவின்; ஆதங்கமாக உள்ளது. இன்று பௌத்தர்கள் கதிர்காமத்தை நிர்வகிக்கிறார்கள். அவர்கள் நிர்வாகத்தினால் பண்பாடுகளும் சமய கலாச்சாரங்களும் தவறடைந்துவிட்டன என்று கவலையுறும் இக்கவிஞர் இத்தவறுகளை நேரில் கண்டும், பிறர் சொல்லக் கேட்டும் கதிர்காமக் கந்தனை எண்ணி உள்ளம் உருகிப் பாடுகின்றார். வரலாற்று வடிவமாகச்  சாதாரண விருத்தங்களையும், துதி வடிவமாகச் சந்த விருத்தங்களையும் ஆக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3031).

ஏனைய பதிவுகள்

16847 வாணர் படைப்புக்கள்.

தி.பொன்னம்பலவாணர் (மூலம்), நாகேந்திரம் நவராஜ், தனிநாயகம் அமலதாஸ் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: நியூ