11194 ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி பேரில் திருவூஞ்சல்.

ஐயம்பிள்ளை பொன்னையா (மூலம்), சிற்றம்பலம் முருகவேள் (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி).

21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அருளானந்த சிவம் என்னும் ஏழாலை ஐயம்பிள்ளை பொன்னையா அவர்கள் சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கும் யாழ். ஏழாலையம்பதியில் ஏழு கோயில்களில் ஒன்றாக விளங்கி அருள்பாலிக்கும் ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகமூர்த்தி சுவாமிகள் பேரில் பாடிய திருவூஞ்சல் இவை. அமரர் ஐயம்பிள்ளை பொன்னையா (1910.10.21- 1993.07.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நல்லாசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை தாய் பொன்னாச்சிப்பிள்ளை. இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும் யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் வேலணை கிராம சபை ஐந்தாம் வட்டாரப் பிரதிநிதியாகவும் வேலணை தபாலதிபராகவும் வேலணை கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துப் பல சமூக சேவைகளைச் செய்து வந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்